வாரிசு படத்தில் நான் நடிக்கவில்லை.. பிரபல நடிகையின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்
வாரிசு
வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடித்துள்ளதாக தகவல் வெளியானது. அதற்க்கு ஏற்றாற்போல் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய், பிரபு, சரத்குமாருடன் குஷ்பூ இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தன.
நான் நடிக்கவில்லை
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிக்கவில்லை என்றும், படப்பிடிப்பில் விஜய்யை பார்க்க தான் சென்றேன் என்று குஷ்பூ கூறியுள்ளார்.
படப்பிடிப்பு சென்றபோது விஜய்யுடன் அந்த புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குஷ்பூவின் இந்த பதில் ரசிகர்கள் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.