11 நாட்களில் இதயம் முரளி செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காதல் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கும்.
அதுவும் நம் மனதிற்கு நெருக்கமான நடிகர் முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் தலைப்பிலேயே, அதுவும் அவருடைய மகன் நடித்து ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.
இதயம் முரளி
அப்படி ரசிகர்களின் அமோக வரவேற்பில் வெளியான திரைப்படம்தான் இதயம் முரளி. கடந்த ஜூலை 10-ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், ஓரளவு நல்ல வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெற்று வந்தது.

வசூல்
இந்த நிலையில், 11 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இதயம் முரளி, இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 28 கோடி வசூல் செய்துள்ளது.
