7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா
இதயம் முரளி
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், சுதாகர், பகத் பாசில், தமன், நிஹாரிகா, டிராவிட் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், 7 நாட்களில் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இப்படம் ரூ. 18.5 கோடி வசூலித்துள்ளது.