திடீரென முடிக்கப்படும் பிரபல சீரியல்! ஹீரோ நிச்சயதார்த்தம் முடிந்ததும் வந்த அதிர்ச்சி செய்தி
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்ற சீரியல் மிக பிரபலம். இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் இந்த தொடரில் ஹிமா பிந்து மற்றும் நவீன் ஆகியோர் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த தொடர் விரைவில் முடியப்போகிறது என தகவல் பரவி வருகிறது. இது அந்த தொடரின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் தான் ஹீரோ நிவீனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை தான் அவர் காதல் திருமணம் செய்கிறார்.
அவர்கள் நிச்சயதார்த்தம் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி சில நாட்களிலேயே இதயத்தை திருடாதே 2 முடிக்கப்படுவதாக வந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுத்திருக்கிறது.