பிரபல தொலைக்காட்சியை திட்டிதீர்க்கும் சீரியல் நடிகை ரச்சிதா- இதுதான் காரணமா?
நடிகை ரச்சிதா
சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை ரச்சிதா. இந்த தொடருக்கு முன் சில சீரியல்கள் நடித்தாலும் பெரிய ரீச் என்பது மீனாட்சியாக நடித்த பிறகு தான்.
கன்னட நடிகையான இவர் தமிழில் அழகாக பேசி நடிப்பார், ஒருகாலத்தில் டாப் சீரியல் நாயகியாக வலம் வந்தார்.
கடைசியாக விஜய்யில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா பின் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடரில் நடிக்க ஆரம்பித்தார், இப்போது அந்த தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது.
ரச்சிதாவின் கோபமான பதிவு
தற்போது நடிகை ரச்சிதா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை திட்டிய வண்ணம் நிறைய பதிவுகள் போட்டு வருகிறார். அவர் பதிவு செய்வதை பார்த்தால் தொலைக்காட்சி சீரியல் நன்றாக ஓடியும் பாதியிலேயே நிறுத்தியதாக தெரிகிறது.
இதோ ரச்சிதா போட்ட சில பதிவுகள்,