ப்ரீ புக்கிங்கில் இட்லி கடை மற்றும் காந்தாரா செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
இட்லி கடை
வருகிற அக்டோபர் 1ஆம் தேதி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தனுஷின் இட்லி கடை படம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.
மேலும் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் வெளிவரவிருக்கும் இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை நடந்துள்ள முன்பதிவில் இப்படம் ரூ. 2+ கோடி வசூல் செய்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வருகிற அக்டோபர் 2ஆம் தேதி வெளிவரவிருக்கும் படம் காந்தாரா சாப்டர் 1. கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்ற காந்தாரா படத்தின் Prequel இது. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ப்ரீ புக்கிங் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்த நிலையில், இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் காந்தாரா சாப்டர் 1 படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளது.