இட்லி கடை உலகளவில் 12 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இட்லி கடை
தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் இட்லி கடை. நடிப்பது மட்டுமின்றி இப்படத்தை அவர் இயக்கியும் இருந்தார். இது அவர் இயக்கத்தில் வெளிவந்த 4வது திரைப்படமாகும்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரசு, ராஜ்கிரண், கீதா கைலாசம் மற்றும் சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், 12 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இட்லி கடை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 12 நாட்களில் ரூ. 70+ கோடி வசூல் செய்துள்ளது.
திருமணம், வெளிநாட்டுப் பயணங்கள் வேண்டாம்... தங்கம் வாங்காதீர்: இந்தியப் பிரதமர் வலியுறுத்தல் News Lankasri