4 நாட்களில் இட்லி கடை படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இட்லி கடை
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் தனுஷ், தொடர்ந்து இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டு ராயன் மற்றும் இந்த ஆண்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ
இதை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகி கடந்த 1ஆம் தேதி திரைக்கு வந்த படம்தான் இட்லி கடை. மிகவும் எளிமையான கதைக்களத்தை கொண்டு மக்களின் மனம் கவரும் வகையில் திரைக்கதையை அமைந்திருந்தார்.
இதனால் இட்லி கடை படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், ஷாலினி பாண்டே என பலரும் நடித்திருந்தனர்.
வசூல்
இந்நிலையில், படம் வெளிவந்து நான்கு நாட்களை கடந்துள்ளது. இதுவரை உலகளவில் இட்லி கடை படம் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூலை வாரிக்குவிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
