இட்லி கடை படம் 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இட்லி கடை
தனுஷின் இட்லி கடை படம் கடந்த 1ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதே போல் மறுபக்கம் கலவையான விமர்சனங்களும் எழுந்தன. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், கீதா கைலாசம், பார்த்திபன், சத்யராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
வசூல்
மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இட்லி கடை படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், 7 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் இட்லி கடை படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri