இட்லி கடை படத்தின் கதை இதுதானா.. இணையத்தில் உலா வரும் தகவல்
இட்லி கடை
நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. இது தனுஷின் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது திரைப்படமாகும். இதற்கு முன் பா. பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இட்லி கடை படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, நித்யா மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
படத்தின் கதை
வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை வெளிவரவிருக்கும் நிலையில், இப்படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷின் சகோதரி ஷாலினி பாண்டே, பணக்காரர் சத்யராஜ் குடும்பத்தை சேர்ந்த குத்துசண்டை வீரர் அருண் விஜய்யை திருமணம் செய்துகொள்கிறார். பின் அருண் விஜய் குடும்பத்திற்கும் தனுஷுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதில் தங்கச்சி செண்டிமெண்ட் உள்ளடக்கிய கதைதான் இட்லி கடை என தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.