நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறாரா..? இல்லையா..? வெளிவந்த உண்மை
சின்னத்திரையின் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதில் தற்போது ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது.
கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொன்டு இருக்கிறது.
பிக் பாஸ் 5 சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்தவர் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ். இவர் நடிகர் விஜய்யின் பல வருட நண்பர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இவர் வீட்டிற்குள் வரும்போதே, பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் பார்க்கிறாரா என்று சிபி கேட்டார். ஆனால் அதற்கு சஞ்சீவ் எந்தஒரு பதிலும் கூறவில்லை.
ஆனால், சஞ்சீவின் மனைவி பிரீத்தி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் பிக் பாஸ் பார்க்கிறார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
அதுமட்மின்றி, சஞ்சீவ் நாமினேட் ஆனபோது, நண்பருக்காக விஜய் வாக்களித்தார் என்று பிரீத்திகூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து நடந்து முடிந்த ப்ரீஸ் டாஸ்கின் போது வீட்டிற்குள் தனது கணவர் சஞ்சீவை பிரீத்தி பார்க்க.வந்திருந்தார். அப்போதும், விஜய் உங்களை பற்றி விசாரித்தார் என்று கூறினார்.