நடிகர் விஜயகாந்தால் பல கோடி சொத்துக்களை இழந்த முன்னணி நடிகை.. பரிதாப நிலையில் பிரபலம்
80களில் பல முன்னணி நடிகர்களுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் நடித்து 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்தார் நடிகை பானு பிரியா.
சினிமாவில் கொடிகட்டி பறந்துவந்து இவர், அதர்ஷ் கெளசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு கலிஃபோர்னியாவில் செட்டிலாகி பெண் குழந்தையும் பெற்றார்.
ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005-ல் தனது கணவரை விவாகரத்து செய்து சென்னையில் மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஆரம்பகால சினிமாவில் நடித்து வந்த பானு பிரியா நடிகர் விஜயகாந்த்துடன் இணைந்து சத்ரியன், ராஜதுரை, காவியத்தலைவன், பரதன் போன்ற வெற்றி படங்களில் நடித்து வந்தார்.
இதனால், நடிகர் விஜயகாந்தை வைத்து தயாரிக்க ஆசைப்பட்டு ஒரு படத்தினை கோடிகளில் பணம் போட்டு தயாரித்துள்ளார் நடிகை பானு பிரியா. அப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்துள்ளது.
இதனால், நடிகை பானு பிரியா பெரும் நஷ்டத்தை சந்தித்து சொத்துக்களை இழந்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.