பீஸ்ட் படத்தின் வசூலுக்கு வரும் ஆபத்து.. இந்த மூன்று முன்னணி நடிகர்கள் தான் காரணமா

vijay prabhas pawan kalyan mahesh babu beast
By Kathick Jul 30, 2021 02:00 PM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சாக நடைபெற்று வருகிறது. மேலும், முழு பின்னணி பணிகளையும் முடித்து பீஸ்ட் திரைப்படம் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.

இந்நிலையில், அதே 2022 பொங்கலுக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதாம்.

ஆம், பவன் கல்யாண் நடிக்கும் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக், மகேஷ் பாபு நடிக்கும் Sarkaru Vaari Paata, மற்றும் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம், என பீஸ்ட் பட அளவிற்கு எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய படங்களும் அதே நாளில் வெளியாகிறது.

இதனால், கண்டிப்பாக பீஸ்ட் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால் பீஸ்ட் திரைப்படம் 2022ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். 



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US