சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறாதா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
ஆனால், படக்குழுவிடம் இருந்து டாக்டர் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், வரும் அக்டோபர் 12ஆம் தேதி நேரடியாக திரையரங்கில் இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu