காஜல் கதாபாத்திரத்தில் இலியானா நடிக்கிறாரா..? இல்லையா..? படக்குழு விளக்கம்
தெலுங்கில் நாகார்ஜூனா நடித்து வரும் கோஸ்ட் படத்தில் நாயகியாக நடிக்க காஜல் அகர்வால் கமிட்டாகியிருந்தார்.
ஆனால் அவர் தீடீரென அப்படத்தில் இருந்து வெளியேறினார். அதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்று கூறுகின்றனர்.
அதையடுத்து காஜல் நடிக்கயிருந்த வேடத்தில் இலியானா கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அந்த செய்தியை கோஸ்ட் படக்குழு மறுத்துள்ளது.
காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் நடிக்க இலியானாவை ஒப்பந்தம் செய்யவில்லை என்று படக்குழு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குவதற்குள், காஜல் வேடத்திற்கு ஒரு நடிகையை தேர்வு செய்து விடவேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளனர்.