தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் பிக் பாஸ் கவின்..? அவரே கூறிய பதில்
நெல்சன் திலீப்குமார் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிக் பாஸ் கவின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறாரா என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இதனை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் கவின் " நான் பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரியவில்லை. முதலில் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால், அதற்குமுன் சில படங்களில் கமிட்டாகியுள்ளதால், பீஸ்ட் படத்தில் கமிட்டாக முடியாமல் போய்விட்டது " என்று கூறியுள்ளாராம்.
நடிகர் கவின் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்திற்கு முன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri