தளபதி 66 படத்தின் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் தானா..? அவரே கூறிய பதில்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 66வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. வம்சி இயக்கவுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், தமன் இசையமைக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவின் மகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், ' தளபதி விஜய்யுடன் நான் 'தளபதி 66' படத்தில் நடிக்கவில்லை' என்று தெளிவாக கூறியுள்ளார்.
.@KeerthyOfficial denies the rumors of #Thalapathy66! #Beast @actorvijay
— VTL Team (@VTLTeam) December 9, 2021
pic.twitter.com/CjJ8VNSKc3
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri