அனுஷ்கா திருமணத்தை தடுத்து நிறுத்திய பிரபாஸ்? இது எப்ப நடந்தது
பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி இருவரும் நிஜத்திலேயே காதலிக்கிறார்கள் என பல வருடங்களாகவே கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை என பிரபாஸ் விளக்கம் கொடுத்தாலும் கிசுகிசு மட்டும் நின்றபாடில்லை.
அவர்கள் தற்போதும் காதலில் தான் இருக்கிறார்கள் என அவ்வப்போது கிசுகிசு செய்திகள் வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் அனுஷ்கா ஷெட்டியின் திருமணத்தை பிரபாஸ் தடுத்து நிறுத்திவிட்டார் என ஒரு வெளியாகி இருக்கும் ஒரு செய்தி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாகுபலி படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது அனுஷ்கா வீட்டில் திருமண ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்களாம். அப்போது அனுஷ்காவிடம் பேசிய பிரபாஸ், தற்போது திருமணம் வேண்டாம், பாகுபலி படத்தில் மட்டும் கவனம் செலுத்து என கூறினாராம். அதன் பின் தான் அனுஷ்கா திருமணம் தற்போதைக்கு வேண்டாம் என முடிவெடுத்ததாக தெரிகிறது. பாகுபலி படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பிரபாஸ் செலவிட்டது குறிப்பிடத்தக்கது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri