சந்திரமுகி 2 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியா? இயக்குனர் பி. வாசு விளக்கம்
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்த படம் சந்திரமுகி.
இப்படத்தின் 2ஆம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராக உள்ளது. மேலும் இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகாக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டியில் கூறுகையில், " சந்திரமுகி 2ஆம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2ஆம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. சந்திரமுகி 2 படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும்." என்று தெளிவாக கூறியுள்ளார்.