சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கிறாரா..? கதாநாயகியாக இந்த நடிகையா..?
பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி.
இப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி, தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
இப்படத்தையும் பி.வாசு தான் இயக்குகிறார். ஆனால், இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், சந்திரமுகி 2வில் கதாநாயகியாக நடிக்க பல நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது அனுஷ்காவை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
