பிரமாண்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தள்ளிபோகிறதா.. ஷாக்கான ரசிகர்கள்
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.
ராஜமவுலி இயக்கியுள்ள இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து, நட்பு எனும் பாடல் அனிருத் குரலில் பாடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக, இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இப்படம் வெளிவராது என்றும், அடுத்த வருடம் ஜனவரி 26ஆம் தேதி தான் இப்படம் வெளிவரும் என்றும் தகவல் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து, படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri