நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம்? தயாரிப்பாளரின் மகன் தான் மாப்பிள்ளையா
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவகாரத்துக்கு பின் சினிமாவில் மட்டுமே நடிகை சமந்தா முழு கவனம் செலுத்தி வருகிறார். மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.
இரண்டாவது திருமணம்
இந்நிலையில், நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணை திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகிறது.
கல்யாணுக்கும் சமந்தாவுக்கும் மே 20ஆம் தேதி திருமணம் என்றும், ஹைதராபாத்தில் உள்ள மாதாபூரில் என் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.
உண்மை இதுதான்
ஆனால், இவை யாவும் உண்மையான தகவல் இல்லை. டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணுக்கு திருமணம் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

அவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் பெயர் தான் சமந்தா. இதனால் தான் நடிகை சமந்தாவிற்கும், கல்யாணுக்கும் திருமணம் என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை சமூக வலைத்தளங்களில் ஊதி பெரிதாக்கி விட்டனர்.
பிரபல ஹீரோவின் ரசிகர்கள் செயலால் பற்றி எறிந்த தியேட்டர்! பரபரப்பு சம்பவம்