சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ஓடிடி-யில் ரிலீசா..? இல்லை தியேட்டரில் ரிலீசா..?
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என்று பிரபல LetsOttGobal டுவிட்டர் பக்கம் அறிவித்திருந்தது.
ஆனால், படக்குழுவிடம் இருந்து டாக்டர் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மீண்டும் தற்போது திரையரங்கங்கள் திறக்கப்பட்டு இருப்பதால், டாக்டர் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் தான், வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி-யில் வெளியாகும் என சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது மிகவும் பெரிய ஆனந்தத்தை கொடுத்துள்ளது.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri