தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஒன் லைன் கதை இதுதானா..? இப்போவே வெளியாகிருச்சே
தமிழ் சினிமாவில் எதிர்பார்க்குரிய படங்களில் ஒன்று, தளபதி விஜய்யின் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கிவரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைகிறார்கள்.
விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒன் லைன் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மக்கள் பெரிதளவில் கூடும் பிரபல ஷாப்பிங் மால் ஒன்றை தீவீர வாதிகள் கைப்பற்றி விடுகிறார்களாம்.
அதிலிருந்து மக்களை, தீவீரவாதிகளிடம் இருந்து விஜய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் பீஸ்ட் படத்தின் கதை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஏற்றாற்போல், சமீபத்தில் கூட பீஸ்ட் படத்திற்காக போடப்பட்ட ஷாப்பிங் மால் செட் மற்றும் அங்கிருந்து விஜய்யின் புகைப்படங்களும் இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது.