தளபதி 66 படத்தின் கதை இதுதானா.. நடிகர் விஜய் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா..?
விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் தனது 66வது படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபுவின் மகள் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அதே போல் மற்றொரு இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் இசையமைப்பாளராக தமன் கமிட்டாகியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
அதன்படி, இப்படத்தின் கதை என்னவென்றால் " இப்படத்தில் விஜய் 'ஈரோட்டோமேனியா' எனும் குறிப்பிட்ட ஒரு நோயால் பாதிக்கப்பட்டாராம். இந்த நோய்யின் காரணமாக விஜய் சந்திக்கும் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் எப்படி விஜய் எதிர்கொள்கிறார். அதனை எதிர்கொண்டு அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் " என்பதே இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.