நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறாதா விக்ரமின் திரைப்படம்.. ரசிகர்கள் அப்செட்

ott vikram karthick subraj mahaan dhurv vikram
By Kathick Oct 29, 2021 09:00 AM GMT
Report

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மகான்.

மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விக்ரமின் ரசிகர்கள் அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மகான்’ திரைப்படம், தற்போது நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக, பிரபல LetsOTT GLOBAL ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US