சத்யா 2 சீரியலை விட்டு வெளியேறும் கதாநாயகன் விஷ்ணு.. ஷாக்கிங் செய்தி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று சத்யா. இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சத்யா 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு ஆக துவங்கியது.
முதல் பாகத்தில் ஒரே வேடத்தில் நடித்து வந்த கதாநாயகி அயீஷா, சத்யா 2 சீரியலில் இரண்டு வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.
இந்நிலையில், சத்யா சீரியலில் அமுல் பேபி என்று கதாநாயகியால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஷ்ணு தீடீரென சீரியலில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் செய்தி வெளிவந்தது.
இதற்கு காரணம், சத்யா சீரியலை தவிர்த்து புதிய சீரியல் ஒன்றில் விஷ்ணு கமிட்டாகியுள்ளது தான் என்றும் கூறப்பட்டது. ஆனால், நான் சத்யா 2 சீரியலை விட்டு வெளியேறவில்லை.
கண்டிப்பாக சத்யா 2 சீரியல் 500 எபிசோட் ஒளிபரப்பாகும் என்று நடிகர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதன்முலம்,சத்யா 2 சீரியலில் இருந்து விஷ்ணு விலகவில்லை என்று தெரியவந்துள்ளது.