சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடித்தது இந்த நடிகரா..! யாருனு தெரியுமா

By Kathick Aug 01, 2021 01:10 PM GMT
Report

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், குத்து சண்டையை மையமாக கொண்டு, நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தில், பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சிறந்த கதைக்களம், ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த நடிப்பு என்று ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் இப்படம் தொடர்ந்து பல பாராட்டுகளை குவித்து வருகிறது.

இப்படத்தில் ஆர்யாவின் தந்தை கதாபாத்திரம் ஒரு காட்சியில் மட்டுமே வந்திருந்தாலும், படம் முழுக்க முக்கியமான கதாபாத்திரமாகவே அமைத்திருந்தது.

இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், நடிகை கிஷோர் தானாம். ஆம், ஆடுகளம், வடசென்னை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகர் கிஷோர் தான் ஆர்யாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் அப்பாவாக நடித்தது இந்த நடிகரா..! யாருனு தெரியுமா | If You Know Who Is The Arya Father In Sarpatta


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US