The Kashmir Files ஒரு இழிவான திரைப்படம், இது இந்த விழாவில் இடம்பெறுவதா?- முக்கிய பிரபலம் ஓபன் டாக்
தி காஷ்மிர் ஃபைல்ஸ்
பாலிவுட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம்.
1990ம் ஆண்டு காஷ்மீரில் பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், அவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறய சம்பவங்கள் காட்சிகளாக திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின.

திரைப்பட விழா
53வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் நிறைவு விழாவில் பேசும்போது, தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற இழிவான பிரச்சாரத்தை கொண்ட திரைப்படம் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த படத்தை பார்த்து நாங்கள் அனைவரும் கலக்கமும், அதிர்ச்சியும் அடைந்தோம் என பேசியுள்ளார்.

இலங்கையில் இருக்கும் பிக்பாஸ் ஜனனியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- எப்படி உள்ளது பாருங்க