இந்த வேதனையை எப்படி போக்குவேன் என தெரியல: லதா மங்கேஷ்கருக்கு இளையராஜா இரங்கல்
பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா தற்போது மிகவும் வருத்தமாக இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60 - 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது தெய்வீக காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு எனது மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது."
":இந்த வேதனையை எப்படி போக்குவேன் என எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகிற்கு மட்டும் அல்ல, இந்த உலகத்திற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்."
இவ்வாறு இளையராஜா கூறி உள்ளார்.
May she rest in peace & light up the heavens with her soulful voice.. pic.twitter.com/yz2AJVevhq
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2022