13 வருட பிரிவு.. மீண்டும் பேச தொடங்கிய இளையராஜா - கங்கை அமரன்! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 13 வருடங்களாக பேசாமல் இருந்த நிலையில் தற்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் நேற்று சந்தித்து பேசிக்கொண்ட நிலையில் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.இளையராஜா பற்றி பல குற்றச்சாட்டுகளை கங்கை மாறன் இதற்கு முன் தெரிவித்து இருக்கிறார். அதை எல்லாம் பேசி சமரசம் ஆகி இருவரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.
"இன்று நடந்த சந்திப்பு .. இறைஅருளுக்கு நன்றி … உறவுகள் தொடர்கதை" என கங்கை அமரன் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
அவர்கள் இருவரும் இத்தனை வருடமாக பேசாமல் இருந்தாலும் கங்கை அமரன் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகியோர் இளையாராஜாவின் மகன் யுவன் உடன் நெருக்கமாகவே இருந்தனர்.
இளையராஜா - கங்கை அமரன் சந்திப்பு பற்றி வெங்கட் பிரபு ட்விட்டரில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார். 'பாவலர் பிரதர்ஸ் ரீயூனியன்' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Pavalar brothers reunion!! @ilaiyaraaja @gangaiamaren ?????? pic.twitter.com/9MABjbLTZp
— venkat prabhu (@vp_offl) February 16, 2022