தமிழ் படம் என்றால் வழக்கு.. தெலுங்கு என்றால் உடனே அனுமதி கொடுத்த இளையராஜா! விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சமீப காலமாக இசையமைப்பாளர் இளையராஜாவின் பெயரை சொல்ல கூட பலரும் யோசிப்பார்கள், அவர் பெயரை பயன்படுத்தினால் கூட அவர் காப்பிரைட் வழக்கு தொடர்ந்துவிட போகிறார் என நெட்டிசன்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதற்கு காரணம் அவர் பல தமிழ் படங்களின் மீது தொடர்ந்த வழக்குகள் தான். மஞ்சுமெல் பாய்ஸ் தொடங்கி குட் பேட் அக்லீ, Dude படம் வரை பல படங்கள் மீது அவர் வழக்குகள் தொடர்ந்து இருக்கிறார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக அவர் வழக்கு தொடர்ந்து அந்த பாடல்களை நீக்கவும் செய்திருக்கிறார்.

தெலுங்கு படத்தில்..
இந்நிலையில் தெலுங்கில் சமீபத்தில் ரிலீஸ் ஆன Mana Shankara Vara Prasad Garu படத்தில் இளையராஜாவின் தளபதி பட பாடல் இடம்பெற்று இருந்தது.
அது பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு 'தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை பயன்படுத்த இளையராஜாவை அணுகியதும் அவர் உடனே அனுமதி கொடுத்துவிட்டார்' என தெரிவித்து இருக்கின்றனர்.
எதையும் முறைப்படி செய்யவேண்டும் எனவும் அந்த படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார்.
