இளையராஜா பிரச்சனை.. சன் டிவி திடீரென நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு
இசைஞானி இளையராஜா நீதிமன்றம் மூலமாக தனது பெயர் மற்றும் போட்டோவை மற்றவர்கள் பயன்படுத்துவதில் இருந்து தடை வாங்கி இருக்கிறார்.
அவரது பாடல்களை பயன்படுத்தியதற்காக பல படங்கள் மீது வழக்கு தொடர்ந்து அதை நீக்கவும் வைத்திருக்கிறார் இளையராஜா.

சன் டிவி மனு
இந்நிலையில் இளையராஜா போட்டோ மற்றும் பெயரை கூட பயன்படுத்தகூடாது என போடப்பட்டு இருக்கும் தடையை மாற்றி அமைக்கும்படி சன் டிவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
நீதிமன்ற தடையால் சட்டப்படி வாங்கிய பதிப்புரிமையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
டிவி சேனல் மற்றும் fm ரேடியோவில் இளையராஜா பாடல்களை ஒளிபரப்பும்போது அவரது பெயரை தவறாமல் குறிப்பிட்டு வருகிறோம். அதனால் இடைக்கால தடையை மாற்றியமைக்க வேண்டும் என சன் டிவி நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறது.
