இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த உயரிய பதவி! பிரதமர் மோடி வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் எல்லோரும் வியந்து போற்றும் ஒருவர். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த அவரை இசைஞானி என்றே எல்லோரும் அழைத்து வருகிறார்கள்.
அவர் சில மாதங்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த கருத்தை திரும்ப பெற மாட்டேன் என இளையராஜா உறுதியாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது இளையராஜாவுக்கு எம்பி பதிவு வழங்கப்பட்டு இருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக அவர் நியமன எம்பி-யாக பிரதமரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த அறிவிப்பு வந்ததும் தற்போது இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பிரதமர் மோடி ட்விட்டரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
The creative genius of @ilaiyaraaja Ji has enthralled people across generations. His works beautifully reflect many emotions. What is equally inspiring is his life journey- he rose from a humble background and achieved so much. Glad that he has been nominated to the Rajya Sabha. pic.twitter.com/VH6wedLByC
— Narendra Modi (@narendramodi) July 6, 2022