தயாரிப்பாளரை திட்டி அனுப்பிய இளையராஜா.. ஏன் தெரியுமா?
இளையராஜா தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து யாரும் தொட முடியாத ஒரு விஷயத்தை செய்திருக்கும் இசையமைப்பாளர்.
அவரது ஹிட் பாடல்களை தற்போதும் ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகிறார்கள். 81 வயதாகும் அவர் தற்போதும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு அவர் இசையமைத்து இருந்தார்.
தயாரிப்பாளரை திட்டிய இளையாராஜா
இளையராஜா சமீப காலமாக பல சர்ச்சைகளில் பேசப்படும் ஒரு நபராகவும் இருந்து வருகிறார். அதனால் அவரை பற்றிய நல்ல விஷயங்கள் கேட்பது அரிதாகி விட்டது. அவர் முன்னணியில் இருந்த காலத்தில் பல படங்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்து இருக்கிறாராம்.
இளையராஜா ஒருமுறை மலையாள படம் ஒன்றிற்கு இசையமைத்த போது, அதன் தயாரிப்பாளர் ரிலீஸ் நேரத்தில் அவரிடம் வந்து, 'உங்களுக்கு சம்பளம் தர என்னிடம் பணம் இல்லை, இதை வைத்துக்கொள்ளுங்கள்' என கூறினாராம்.
அதை எடுத்து பார்த்தால் அவரது மனைவியின் தாலி அதில் இருந்திருக்கிறது. அதை எடுத்துட்டு இங்கிருந்து கிளம்புயா என கோபமாக திட்டி அனுப்பிவிட்டாராம் இளையராஜா.