கோவிலில் நிஜமாகவே நடந்தது என்ன, பரபரப்பு செய்திகளுக்கு இளையராஜா கொடுத்த விளக்கம்... அவரே போட்ட பதிவு
இளையராஜா
இசையமைப்பாளர் இளையராஜா, தெய்வ நம்பிக்கை உடைய பிரபலம்.
சினிமா பணிகளை தாண்டி அவ்வப்போது கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் இளையராஜா. மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக இளையராஜா கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து இளையராஜா சாமி தரிசனம் செய்ய சென்றபோது அவரை அர்த்த மண்டபத்துக்கு அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை பரவியது.
அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என்றும், இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியது என்றும், இதன் பிறகு அவரே வெளியில் நின்று தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.
பிரபலத்தின் பதிவு
இந்த சம்பவம் குறித்து இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள்.
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 16, 2024
இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.