கைவிடப்படுகிறதா தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா
இளையராஜா
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.
ஆனால் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் விலகினார். இருப்பினும், தனுஷ் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டு இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டது.
காரணம் இதுதானா
ஆனால், அதன் பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இளையராஜாவின் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
