சம்பளம் வாங்காமல் இசையமைத்து கொடுத்த இளையராஜா.. அதுவும் எந்த படத்திற்காக தெரியுமா
இளையராஜா
உலகளவில் இசையால் பிரபலமானவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர், அடுத்தடுத்து தொட்ட விஷயங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியை பெற்று வந்தது.
இன்று இவருடைய இசையை கேட்காமல் பொழுதை கழிப்பவர்கள் ஏராளமானோர் உண்டு. சமீபத்தில் தான 48 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்தார் இளையராஜா. பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறும் தற்போது படமாக எடுக்கப்படவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடைபெற்று முடிந்த டைட்டில் போஸ்டர் கூட வெளியிட்டு இருந்தனர்.
சம்பளம் வாங்காத இளையராஜா
இளையராஜா குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் கூட, அவரை பற்றி பலரும் தெரிந்துகொள்ளாத நல்ல விஷயங்கள் இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி. வாசு. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். இப்படத்திற்கு இளையராஜா தான் இசையைத்திருந்தார்.
அந்த காலகட்டத்தில் ஒரு படத்திற்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தாராம் இளையராஜா. ஆனால், பன்னீர் புஷ்பங்கள் படம் ஆரம்பித்து முடியும் கட்டம் வரும் வரை தனது சம்பளம் குறித்து எதுவுமே சொல்லவில்லையாம். உங்களுடைய சம்பளம் எவ்வளவு என இயக்குனர் பி. வாசு, இளையராஜாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு இளையராஜா 'இப்போ தானே வந்துருக்கீங்க, முதல் படம் நல்லா பண்ணுங்க, எனக்கு சம்பளம் வேண்டாம்' என கூறினாராம். இந்த தகவலை பி. வாசு பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.