மாபெரும் வெற்றியடைந்த லப்பர் பந்து படக்குழுவினரை நேரில் சந்தித்த இளையராஜா.. புகைப்படங்கள் இதோ
லப்பர் பந்து
சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் சுவாசிகா, சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் பிறந்தநாள்.. அவர் முதன் முதலில் 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய படம் எது தெரியுமா
இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஷயம் 'நீ பொட்டு வெச்ச தங்க குடம்' பாடல் தான். விஜய்காந்த் படத்தில் இடம்பெற்றிருந்த இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
படக்குழுவினரை நேரில் சந்தித்த இளையராஜா
இன்று ரசிகர்கள் மத்தியில் இளையராஜாவின் இந்த பாடல் வைரலாகி வரும் நிலையில், லப்பர் பந்து படக்குழுவினரை நேரில் அழைத்து சந்தித்துள்ளார் இளையராஜா. அதுமட்டுமின்றி தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
லப்பர் பந்து படக்குழுவினர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், நடிகை சஞ்சனா, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து உட்பட அனைவரும் இளையராஜாவை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..





குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
