புதிய ஸ்டுடியோவில் வெற்றிமாறன் படத்தின் வேலையை தொடங்கிய இளையராஜா, வெளியான புகைப்படங்கள்..
இசைஞானி இளையராஜா கடந்த பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு ஸ்டூடியோ அமைத்து பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த பிரச்சனையின் காரணமாக பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேறும் நிலை ஏற்பட்டு, இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மேலும் இளையராஜா தனது புதிய ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெற்றிமாறன் படத்தின் பாடல் வேலைகளை அங்கு தொடங்கியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கும் அந்த படத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri