தமிழ்ப் படங்களில் இலியானா நடிக்க தடையா? உண்மை இது தான்
தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் இலியானா. இவர் நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் 2006 -ம் ஆண்டு வெளியான "கேடி" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராததனால் டோலிவுட் பக்கம் சென்று பிரபல நடிகையாக மாறினார்.
இலியானா, தளபதி விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து இவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
தமிழ் படத்தில் தடையா?
இலியானா தமிழ்ப் படத்தில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கவில்லையாம். கடைசியில் அந்த தயாரிப்பாளர் இலியானா மீது தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் இலியானாவிற்கு தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த சில தினங்களாக இந்த செய்தி வைரலன நிலையில் இலியானா விளக்கம் எதுவும் தரவில்லை.
இருப்பினும் இலியானாவுக்கு தடை என வந்த செய்தி உண்மையில்லை என தயாரிப்பாளர் சங்க தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹோட்டல்ல மீட் பண்ண கூப்பிட்டார்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அறிவிப்பு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் IBC Tamilnadu
