I'm Game திரை விமர்சனம்
துல்கர் சல்மான் நீண்ட இடைவேளை பிறகு மலையாள சினிமாவில் நிகாஸ் இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள இந்த ஐயம் கேல் ரசிகர்களை கவர்ந்தா? பார்ப்போம்.

கதைக்களம்
துல்கர் சல்மான் பணக்கார வீட்டு பையன், எப்போதும் குடி, சூதாட்டம் என இருப்பவர், எப்படியாவது அப்பாவை விட பெரியாளாக வரவேண்டும், அவரை ஜெயிக்க வேண்டும் என சூதாடிக்கொண்டே இருக்கிறார்.
ஆனால் இவர் சூதாட்டத்தில் பல கோடிகளை விட, அங்கு என்ன செய்வது என்று தெரியாமல் துப்பாக்கி காட்டி பணத்தை வாங்கி கொண்டு தப்பிகிறார், அப்படி தப்பிக்கையில் அவர் கார் ஒரு லாரியில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு துல்கர் கை இழக்கும் நிலை ஆகிறது.

அதனால் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு டோனார் மூலம் புது கை ஒன்றை பிக்ஸ் செய்கின்றனர், எல்லாம் சரி ஆகும் என நினைத்தால் அந்த கை மூலம் அவருக்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்கிறது.
அதன் மூலம் சூதாட்டத்தில் வெற்றியை குவிக்க, ஆனால் அந்த கை மிஷ்கினை கொலை செய்ய குறிவைக்க, அந்த கை யாருடையது, எதற்கு மிஷ்கினை குறிவைக்கிறது, இதில் துல்கர் என்ன ஆனார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
துல்கர் சல்மான் மனுஷன் மிரட்டியுள்ளார், சூதாட்டத்தில் அத்தனையும் இழந்து தோல்வி முகத்தை காட்டி, விபத்துக்கு பிறகு அந்த பவர் கிடைத்ததும் அந்த கை Vs துல்கர் என வரும் காட்சிகள், அதில் துல்கர் நடித்த விதம் அதிலும் இடைவேளையில் துல்கர் பெர்ப்பாமன்ஸ் டாப் க்ளாஸ்.
படத்தின் முதல் பாதி செம விறுவிறுப்பு, அடுத்து என்ன அடுத்து என்ன என்றே செல்கிறது, அந்த கை என்னென்ன செய்கிறது, துல்கர் எப்படி அதை சமாளிக்கிறார், பிறகு அந்த கை-யுடன் அவர் ஒன்றினைந்து செய்யும் காட்சிகள் என அனைத்தும் செம சூப்பராகவே செல்கிறது.

கயாடு துல்கருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டராக வந்து செல்கிறார், ரசிக்க வைக்கிறார். ஆனால், பெரிய அழுத்தமான கதாபாத்திரம் இல்லை, மிஷ்கின் வழக்கமான ஹை க்ளாஸ் வில்லன் தான்.
ஆனால், சூப்பர் பவர் மிஷ்கின் இதையெல்லாம் வைத்து பார்த்தால் மாவீரன் படத்தில் நிகாஸ் மிகவும் இன்ஸ்பியர் ஆகியிருப்பார் போல, அதற்காக மிஷ்கினையே வில்லனாக போட்டது அப்படியே மாவீரனை நியாபகப்படுத்துகிறது.

இத்தனை ஆர்பட்டத்துடன் முடிந்த முதல் பாதி, இரண்டாம் பாதி தொடங்கி கொஞ்ச நேரம் நன்றாக சென்றாலும் போக போக சுவாரஸ்யமான காட்சிகள் ஏதுவில்லாமல் பார்த்து பழகி போன பழிவாங்குதல் களமாக மாறியது கொஞ்சம் ஏமாற்றமே, ஏனெனில் படத்தின் முதல் பாதி செட் பண்ண ஹைப் அப்படி.
டெக்னிக்கலாக படம் செம சம்பவம் என்றே சொல்ல வேண்டும், அதிலும் படத்தின் ஒளிப்பதிவு எதோ கொரியன் படம் போல் உள்ளது,ஜேக்ஸ் பிஜாய் இசை படத்திற்கு நல்ல பலம், ஸ்டெண்ட் காட்சிகள் மிரட்டல்.
க்ளாப்ஸ்
துல்கர் சல்மான் மிரட்டல் பெர்ப்பாமன்ஸ்
கான்செப்ட்
டெக்னிக்கல் ஒர்க்
படத்தின் முதக் பாதி
பல்ப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் முதல் பாதி போலவே இரண்டாம் பாதி அமைந்திருந்தால் இந்த ஐயம் கேம், ஆர்பாட்டத்தின் உச்சமாக இருந்திருக்கும், ஆனாலும், டீசண்ட் வாட்ச் ஆக தான் உள்ளது.

அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து பிரித்தானியாவைக் காப்பாற்றினேன்... ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri