பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிக்கு வராதது ஏன்?- முதன்முறையாக கூறிய இமான் அண்ணாச்சி
கடந்த வருடம் அக்டோபர் 4ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 5வது சீசன். 100 நாட்களை கடந்து ஒளிபரப்பான நிகழ்ச்சி ஜனவரி 16ம் தேதி வெற்றிகரமாக முடிந்தது.
நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு கோப்பையை பெற்றார். அவரது வெற்றியை தமிழ்நாடே கொண்டாடியது என்றே கூறலாம். அவர் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து முழு ஈடுபாடுடன் பங்குபெற்று வந்தார்.
ரூ. 50 லட்சத்தை பரிசாக பெற்ற அவரை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காணலாம் என்பது மட்டும் உறுதி.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ராஜுவுடன் அதிகம் இருந்தது இமான் அண்ணாச்சி தான், ஆனா அவர் பைனல் நிகழ்ச்சிக்கு வரவே இல்லை. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தொடர்ந்து பட சூட்டிங், டப்பிங் போன்ற வேலைகள் இருந்தது.
இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏழு நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. படப்பிடிப்பு, டப்பிங் போன்றவற்றில் நான் பிசியாக இருந்ததால் என்னால் தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.
அதனால் தான் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.