வெளியேற்றப்பட்ட இமான் அண்ணாச்சி.. தூணை பிடித்துக்கொண்டு கதறி அழுத ராஜு
பிக் பாஸ் வீட்டில் இருந்து இமான் அண்ணாச்சி இன்று எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என கமல் எப்போதும் சொல்வது இன்று நிஜமாகி விட்டது. அபினை காப்பாற்றப்பட்டது எப்படி? இமான் அண்ணாச்சி வெளியே போகவேண்டியவர் அல்ல என்று தான் சமூக வலைத்தளங்களிலும் தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக காப்பாற்றி வந்தார் கமல். தாமரை,அக்ஷரா மற்றும் அபினை ஆகியோரை வரிசையாக காப்பாற்றினார். அதன் பிறகு எலிமினேன் யார் என்பதை பற்றி கார்டை எடுத்து காட்டினார்.
இமான் தான் எலிமினேஷன் என அறிந்து அனைவரும் ஷாக் ஆனார்கள்.அதன் பிறகு அனைவரிடமும் விடை பெற்று இமான் அண்ணாச்சி கிளம்ப தயாரானார். அப்போது ராஜுவிடம் பேசிய அவர் "உன்னை விட்டு முப்பது நாள் எப்படி இருக்க போகிறேனோ" என கூறினார்.
அதை கேட்டு ராஜூ அருகில் இருக்கும் தூணை பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார். அவரை மற்றவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.
ராஜு கண்ணீர் விட்டது எமோஷ்னல் ஆக்கி விட்டது என சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.