Bigg Boss 5 இந்த வார எலிமினேஷன் இவர்தான்! யாருமே எதிர்பார்க்காத ஒருவர்
பிக் பாஸ் 5ல் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடக்க போகிறது என தகவல் சில தினங்களுக்கு முன்பு பரவியது. ஆனால் இந்த வாரம் ஒரே ஒரு எலிமினேஷன் தான் என தற்போது தெரியவந்திருக்கிறது.
அபினை தான் கடந்த பல வாரங்களாக டேஞ்சர் ஸோனில் இருந்து வந்தார். அதனால் அவர் தான் வெளியே போவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இல்லை, எலிமினேட் ஆகப்போவது இமான் அண்ணாச்சி என தகவல் வெளிவந்திருக்கிறது.
அபினை சாவித்ரியின் பேரன் என்பதால் தான் தொடர்ந்து காப்பாற்றப்படுகிறார். Nepotism தான் காரணம் என சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து இருக்கிறது.
இமான் அண்ணாச்சி ராஜு உடன் அதிகம் நெருக்கமாக இருந்து வந்த நிலையில் அவர் எலிமினேட் ஆவது ராஜுவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.