மாமன்னன் மாரி செல்வராஜை தாக்கி பேசிய இமான் அண்ணாச்சி!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி நடித்து இருந்த மாமன்னன் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை பாராட்டி ரஜினி உட்பட பல பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி ஒரு பட விழாவில் பேசும்போது மாமன்னன் படத்தை தாக்கி பேசி இருக்கிறார்.
தாக்கி பேசிய இமான் அண்ணாச்சி
மேடையில் பேசிய இமான் அண்ணாச்சி, "இப்போ சினிமா வேற லெவல்ல போய்டுச்சு. எல்லாரும் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் போது காரி துப்பனும். அப்படி இருந்தால் படம் பெரிய ஹிட். அதை பற்றியே பத்திரிகையில் தொடர்ந்து எழுதி கொண்டிருப்பாங்க. "
"குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி படம் எடுத்தால் அது பரபரப்பாக ஓட தொடங்கிவிடும். இது எந்த சமுதாய படம் என எல்லா படத்திற்கும் கேட்கிறார்கள். மேல்த்தட்டு படமா, கீழ்த்தட்டு படமா எனவும் கேட்கிறார்கள்."
"இதற்கு முன் பிரம்மாண்ட படங்கள் கொடுத்த இயக்குனர்களின் படைப்புகள் ஒன்றில் கூட ஜாதிய வாடை இருந்திருக்குமா. அந்த படங்கள் எல்லாம் 100 நாள், 175 நாள் என ஓடி இருக்கும்."
"இப்படி ஜாதி படங்கள் எடுப்பதில் இருந்து தமிழ் சினிமா வெளியில் வர வேண்டும் என காமெடியனாக இல்லாமல், ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு இமான் அண்ணாச்சி பேசி இருக்கிறார்.
விஜய் அணிந்து வந்த பச்சை சட்டை.. யார் கிப்ட்டாக கொடுத்தது தெரியுமா? வைரல் தகவல்