ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் திடீரென முக்கிய நபர் மாற்றம்.. யாரு தெரியுமா?
கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர்.
நாயகிகள் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற நாயகிகளுக்கு மத்தியில் கருப்பு நிறத்தில் ஒரு நாயகி வைத்து தொடர் ஒளிபரப்பாகிறது.
500 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இப்போது நாயகனுக்காக நாயகியை கொலை செய்யும் வில்லியின் எபிசோடுகள் பரபரப்பாக ஓடுகிறது.
திடீரென மாற்றம்
பரபரப்பான கதைக்களத்துடன் கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகி வர இப்போது முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளது. கார்த்திக் என்பவர் தொடரை இயக்கி வந்த நிலையில் மாற்றம் நடந்துள்ளது.
பூவே பூச்சூடவா, சில்லுனு ஒரு காதல், மாரி போன்ற தொடர்களை இயக்கிய ரத்தினம் வாசுதேவன் தான் இனி கார்த்திகை தீபம் தொடரை இயக்க இருக்கிறாராம்.