பொன்னியின் செல்வன் வெளியான இதே நாளில் நடிகை திரிஷாவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வு !
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தவர் முன்னணி கதாநாயகி நடிகை திரிஷா.
திரிஷா
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் இருந்ததே ரசிகர்கள் மனதை கவர்ந்து வந்த திரிஷா, இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் குந்தவையாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினமான செப்டம்பர் 30-ம் தேதி நடிகை திரிஷாவின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆம், பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதும், திரிஷா Miss சென்னை பட்டம் வென்றதும் இதே நாளில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்