2026ல் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார், முதல் மாநாடு எங்கே?- வெளிவந்த முக்கிய விவரங்கள்
நடிகர் விஜய்
சினிமா டூ அரசியல் களம் வந்த பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் ஜெயித்தவர்கள் சிலர் தான் உள்ளார்கள்.
அரசியல் ஒரு கடல் போல நீண்டதூரம் நீந்திக்கொண்டே வர வேண்டும், அப்போது தான் ஜெயிக்க முடியும். இடையில் கொஞ்சம் தடுமாறினாலும் அவ்வளவு தான் என்பார்கள்.
இப்போது இந்த அரசியல் என்னும் கடலில் நீந்த விஜய் களமிறங்கியுள்ளார், அவரது பயணம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண தான் மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.

முக்கிய தகவல்
தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு விஜய் பெயர் வைத்துள்ளார், மற்றபடி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் ஒரு முக்கிய தகவல் கசிந்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தூத்துக்குடி அல்லது நாகை தொகுதியில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளாராம்.
அதேபோல் தூத்துக்குடி அல்லது திருநெல்வேலியில் முதல் மாநாட்டை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாம்.
முதல் மாநாட்டில் கட்சி கொடி மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நடக்குமாம். தமிழக வெற்றி கழகம் முதலில் தென் மண்டலத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாம்.
