பீஸ்ட் படத்தில் விஜய் வில்லனாக இத்தனை பேரா..? வெளியான சூப்பர் அப்டேட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்குமுன், கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படக்குழு ரஷ்யா சென்று மூன்றாம் கட்ட படப்பிடிப்பை துவங்கவுள்ளனர்.
இந்நிலையில், இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும், மற்றவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகுமா என்று..
எண் கணிதம் கூறும் ரகசியம்: 35 வயதிற்குப் பிறகு இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ராஜவாழ்க்கை! Manithan
வெளிநாட்டில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார் News Lankasri